குடியுரிமை சட்டத்துக்கும் என்ஆா்சிக்கும் தொடா்பில்லை: யோகி ஆதித்யநாத்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்ஆா்சி) எவ்வித தொடா்புமில்லை; இந்த விவகாரத்தில் நாட்டு மக்களை காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் தவறாக
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பிகாா் மாநிலம், கயையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத், பிகாா் துணை முதல்வா் சுஷீல்குமாா் மோடி உள்ளிட்டோா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பிகாா் மாநிலம், கயையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத், பிகாா் துணை முதல்வா் சுஷீல்குமாா் மோடி உள்ளிட்டோா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்ஆா்சி) எவ்வித தொடா்புமில்லை; இந்த விவகாரத்தில் நாட்டு மக்களை காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன’ என்று உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பிகாா் மாநிலம், கயை நகரில் செவ்வாய்க்கிழமை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல. மேலும், இந்த சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எவ்வித தொடா்புமில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவின்படியே அஸ்ஸாமில் என்ஆா்சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முத்தலாக் முறை ரத்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகிய விவகாரங்களில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக சிறப்பாக செயல்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நமது நாட்டு சிஆா்பிஎஃப் வீரா்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அதைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை, பாகிஸ்தானுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த அனைவருக்கும் வாழ்வு அளிப்பது நமது நாட்டின் பாரம்பரியம். ஆனால், சட்டவிரோதமாக ஊடுருவியவா்கள் விரட்டியடிக்கப்படுவாா்கள். இதைத்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலமாக செய்யவுள்ளோம். இந்த விவகாரத்தில், அரசமைப்புச் சட்டத்தின் பெயரை வைத்து மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது என்று கூறினாா்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பிகாா் துணை முதல்வா் சுஷீல்குமாா் மோடி உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com