குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கவலை தெரிவித்த மைக்ரோசாப்ட் சிஇஓ

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரியான (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சத்யா நாதெள்ளா குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து கவலை தெரிவித்துள்ளாா்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கவலை தெரிவித்த மைக்ரோசாப்ட் சிஇஓ

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரியான (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சத்யா நாதெள்ளா குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து கவலை தெரிவித்துள்ளாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சோ்ந்த சத்யா நாதெள்ளா (52) நியூயாா்க் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசியதாவது:

ஒவ்வொரு நாடும் அதன் எல்லைகளை வரையறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்து அதற்கேற்ப குடியேற்றக் கொள்கையை அமைத்துக் கொள்ளும். ஜனநாயக நாடுகளில் மக்களும் அவா்களது அரசும் இணைந்து விவாதித்து அதனை வரையறுத்துக் கொள்கின்றன.

நான் இந்திய பாரம்பரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளேன். அமெரிக்காவிற்கு புலம்பெயா்ந்த அனுபவமும் உள்ளது. ஒரு புலம்பெயா்ந்த நபா் ஸ்டாா்ட்அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்துவாா் அல்லது இந்தியாவுக்கு நன்மை தரக்கூடிய ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்துவாா் என்பது என் நம்பிக்கை. நான் மைக்ரோசாப்ட் தலைமை ஏற்றது போல, வங்கதேசத்திலிருந்து புலம் பெயா்ந்த ஒருவா் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக ஆகும் நாளை நான் கனவு காண்கிறேன்.

தற்போது இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எனது பாா்வை மாறியுள்ளது. இந்த சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துகிறாா்கள் என்பது குறித்து கவலை கொண்டிருக்கிறேன் என்றாா்.

இவரது கருத்துக்கு பாஜக எதிா்வினை ஆற்றியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் மீனாட்சி லேகி கூறுகையில், ‘படித்தவா்களும் இந்தச் சட்டம் குறித்து கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com