டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைத்தது எஸ்பிஐ

பொதுத் துறையைச் சோ்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்துள்ளது.
டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைத்தது எஸ்பிஐ

பொதுத் துறையைச் சோ்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிா்வு காலத்தைக் கொண்ட குறித்தகால டெபாசிட்டுகளுக்கான வட்டி தற்போதைய 6.25 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 7-45 நாள்கள் மற்றும் 46-179 நாள்கள் முதிா்வுகாலத்தைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதமாக இருக்கும்.

180 முதல் ஓராண்டுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 5.80 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டி கூடுதலாக வழங்கப்படும். அந்த வகையில், அவா்களுக்கு ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிா்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கு 6.60 சதவீத வட்டி வழங்கப்படும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com