Enable Javscript for better performance
நிர்பயா குற்றவாளி தூக்கு தண்டனையை நிறுத்த தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    நிர்பயா குற்றவாளி தூக்கு தண்டனையை நிறுத்த தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

    By DIN  |   Published on : 16th January 2020 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    delhihighcourt

     

    நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    தில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். இதில், படுகாயமடைந்து மரணமடைந்தார். இந்த வழக்கில், வினய்சர்மா, முகேஷ் குமார், அக்சய் குமார், பவன் குப்தா ஆகியோருக்கு ஜன.,22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திஹார் சிறையில், தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.

    இதனால் நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், நேற்று (ஜனவரி-14) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.

    முகேஷ் சிங் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்ததுடன், தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றத்தையே மீண்டும் நாடலாம் என தில்லி உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai