மகாராஷ்டிரத்தில் 350 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை

மகாராஷ்டிரத்திவில் 350 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். 
மகாராஷ்டிரத்தில் 350 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை

மகாராஷ்டிரத்திவில் 350 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். தாதர் பகுதியிலுள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில் இச்சிலை அமைக்கப்படவுள்ளது. 

ரூ.763 கோடி மதிப்பீட்டில் அம்பேத்கர் சிலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இதன் மதிப்பீடு தற்போது ரூ. 1,069.95 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அம்பேத்கருக்கு 250 அடி உயரத்தில் சிலை அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அது தற்போது 350 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிலைக்கு கீழ் பகுதியில் 100 அடிக்கு அம்பேத்கர் நினைவகம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது. 

இதனால், அம்பேத்கர் சிலையின் மொத்த உயரம் 450 அடி வரை இருக்கும். இந்த சிலை 2 வருடங்களில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கப்படும் என கடந்த 2015, அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த திட்டம் தற்போது மாநில அமைச்சரவையின் அனுமதியுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com