நிர்பயா குற்றவாளி தூக்கு தண்டனையை நிறுத்த தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நிர்பயா குற்றவாளி தூக்கு தண்டனையை நிறுத்த தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். இதில், படுகாயமடைந்து மரணமடைந்தார். இந்த வழக்கில், வினய்சர்மா, முகேஷ் குமார், அக்சய் குமார், பவன் குப்தா ஆகியோருக்கு ஜன.,22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திஹார் சிறையில், தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.

இதனால் நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், நேற்று (ஜனவரி-14) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.

முகேஷ் சிங் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்ததுடன், தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றத்தையே மீண்டும் நாடலாம் என தில்லி உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com