பட்ஜெட்டில் 300-க்கும் மேற்பட்ட பொருள்கள் மீதான வரி கூடும்

எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் 300-க்கும் மேற்பட்ட பொருள்களின் இறக்குமதி மீதான சுங்க வரியை உயர்த்தப்படும்...
பட்ஜெட்டில் 300-க்கும் மேற்பட்ட பொருள்கள் மீதான வரி கூடும்

புதுதில்லி: உள்நாட்டு தொழில் துறையை மேம்படுத்துதற்கான ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக, எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் பொம்மைகள், இருக்கைகள் உள்ளிட்ட மரத்தால் செய்யப்பட்ட பொருள்கள், காலணிகள், ரப்பர் பொருள்கள் போன்ற 300-க்கும் மேற்பட்ட பொருள்களின் இறக்குமதி மீதான சுங்க வரியை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை அமைச்சகம் தனது பட்ஜெட் பரிந்துரைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு நிவாரணம் அளிப்பதும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதும் தவிர, இறக்குமதியைக் குறைத்துக் வருவாயை உயர்த்தவும், இவற்றில் பல சிறு மற்றும் நடுத்தரத் துறைகளில் குவிந்துள்ள தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்புகளும் இடம்பெறும். 

ரசாயனங்கள், ரப்பர், பூச்சு இடப்பட்ட காகிதங்கள் மற்றும் அட்டைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொருள்களின் மீதான சுங்க வரியை அதிகரிக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.

காலணிகள் மற்றும் தொடர்புடையவற்றின் இறக்குமதி மீது தற்போது வசூலிக்கப்படும் வரியை 25 சதவீதத்தில் 35 சதவீதமாக அதிகரிக்கவும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது, அதே நேரத்தில் நவீன ரப்பர் (நியூமேடிக்) டயர்களுக்கு, சுங்க வரியை 40 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளது. 

மேலும், காலணிகள் மீதான இறக்குமதி வரி உயர்வு என்பது மதிப்புக் குறைக்கப்பட்ட மற்றும் மலிவான காலணிகளின் இறக்குமதி  அதிகரிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாகும்.

மரத்தாலான பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தவும், பூச்சு இடப்பட்ட காகிதம், அட்டைகள் மற்றும் கையால் செய்யப்பட்ட காகிதங்களுக்கான வரியை 20 சதவீதமாக இரட்டிப்பாக்கவும் பரிந்துரைத்துள்ளது.

தற்போது 10 மற்றும் 5 சதவீதமாக இருக்கும் கழிவுக் காகிதம் மற்றும் மரக் கூழ் மீதான இறக்குமதி வரியை நீக்கவும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. காகிதத் தொழிலில் மலிவான இறக்குமதிகள் மற்றும் உள்வரும் ஏற்றுமதிகளின் அதிகரிப்பு குறித்து அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

மரம், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகள் மீதான தற்போதைய 20 சதவீத இறக்குமதி வரியை 100 சதவீதம் வரை உயர்த்தவும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் 281.82 மில்லியன் டாலராக இருந்த சீனா, ஹாங்காங் பொம்மைகளின் இறக்குமதி, 2018-19 ஆம் ஆண்டில் 304 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com