டெபிட், கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதவர்கள் கவனத்துக்கு!

ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஒரு பயனாளர் தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த வசதி முற்றிலும் ரத்து செய்யப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கிரெடிட், டெபிட் கார்டு
கிரெடிட், டெபிட் கார்டு

ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஒரு பயனாளர் தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த வசதி முற்றிலும் ரத்து செய்யப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு மோசடிகளைத் தவிர்க்க வங்கிகளுக்கு ஆர்பிஐ அளித்திருக்கும் புதிய கொள்கைகளில் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு வங்கிப் பயனாளர், தனது டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனையை ஒருபோதும் மேற்கொள்ளாதவராக இருந்தால், அவருடைய கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வசதியை ரத்து செய்யுமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 15ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இதுவரை ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளாத அட்டைகளுக்கு, அந்த வசதியை ரத்து செய்துவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

வங்கி அட்டையைப் பயன்படுத்துவது தொடர்பான பல்வேறு வழிகாட்டுதல்களை வங்கிகளுக்கு ஆர்பிஐ பிறப்பித்துள்ளது. 

எனவே, இதுவரை ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளாத டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளுக்கு, விரைவில் அந்த வசதி முற்றிலும் ரத்தாவதற்கு ஆபத்து  ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com