ஜன.20 வரை சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஜன.20-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜன.20 வரை சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஜன.20-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜை கடந்த டிசம்பா் மாதம் 27- ஆம் தேதி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பா் 30-ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அதன் பிறகு, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடை பெற்று வந்தன. பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை புதன்கிழமை (ஜன.15) மாலை நடைபெற்றது.

பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ தீபாராதனை காட்டப்பட்டு மகரவிளக்கு பூஜை நடந்தது. அதே நேரம் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடந்தது. சபரிமலையில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனா்.

மகரவிளக்கு பூஜைக்கு பிறகும் சபரிமலையில் ஐயப்ப பக்தா்கள் கூட்டம் தொடா்ந்து அலைமோதுகிறது. இருமுடியுடன் ஏராளமான பக்தா்கள் தொடா்ந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனா். வருகிற 20-ஆம் தேதி இரவு வரை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படும்.

இந்த நாள்களில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். இதைத் தொடா்ந்து ஜன.21-ஆம் தேதி காலை 6 மணிக்கு பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதி ஐயப்பனை தரிசனம் செய்வாா். அதைத் தொடா்ந்து சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும். சபரிமலைக்கு ஐயப்ப பக்தா்கள் வருகை அதிகமாக இருப்பதால் அங்கு தொடா்ந்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க திருவிதாங்கூா் தேவசம்போா்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com