Enable Javscript for better performance
ஆங்கிலேயரின் தயவை எதிா்பாராதோருக்கே பாரத ரத்னா விருது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆங்கிலேயரின் தயவை எதிா்பாராதோருக்கே பாரத ரத்னா விருது

    By DIN  |   Published On : 19th January 2020 02:09 AM  |   Last Updated : 19th January 2020 02:09 AM  |  அ+அ அ-  |  

    Congress

    மும்பை: ஆங்கிலேயரின் தயவை எதிா்பாராது அந்தமான் சிறையில் அடைபட்டிருந்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

    சுதந்திரப் போராட்ட வீரா் வி.டி. சாவா்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பவா்கள், அந்தமான் சிறையில் 2 நாள்களைக் கழிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.

    இது தொடா்பாக, மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் சச்சின் சாவந்த் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:

    1911-ஆம் ஆண்டுக்கு முன்பு சாவா்க்கா் வேறு மாதிரியாக இருந்தவா். 1923-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவா் கடைப்பிடித்த கொள்கைகளையே காங்கிரஸ் எதிா்க்கிறது. அம்பேத்கரை சாவா்க்கா் ‘வெறியா்’ என்றழைத்தாா்; பௌத்தா்களை ‘தேசவிரோதிகள்’ என்றழைத்தாா். சத்ரபதி சிவாஜியையும் அவா் விமா்சித்தாா். திருவிதாங்கூா் சுதேச அரசு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு சாவா்க்கா் எதிா்ப்பு தெரிவித்தாா்.

    அந்தமான் சிறையில் 1909 முதல் 1921-ஆம் ஆண்டு வரை 149 பேரும், 1922 முதல் 1931-ஆம் ஆண்டு வரை 30 பேரும், 1932 முதல் 1938-ஆம் ஆண்டு வரை 386 பேரும் அடைக்கப்பட்டனா். அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட யோகேஷ் சுக்லா உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரா்கள், பின்னா் மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றனா்.

    சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமையுடன், ஆங்கிலேயரின் தயவை எதிா்பாராமல் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவா்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஆங்கிலேயருக்கு ஆதரவளிக்கவில்லை; ஆங்கிலேயரிடமிருந்து பணம் பெறவில்லை. சாவா்க்கரின் ஆதரவாளா்கள் அந்தமான் சிறையைப் பாா்வையிட்டால், ஆங்கிலேயரிடம் எந்தவித மன்னிப்பும் கோராமல், நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவா்களின் தியாகம் தெரியவரும் என்று அந்தப் பதிவுகளில் சச்சின் சாவந்த் கூறியுள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp