முக்கோண வடிவில் அமைகிறதா நாடாளுமன்ற புதிய வளாகம்?

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வளாகம் முக்கோண  வடிவில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத் கட்டடம்
தற்போதைய நாடாளுமன்றத் கட்டடம்

புது தில்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வளாகம் முக்கோண  வடிவில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நமது நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.  அதன்படி கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வளாகம் முக்கோண  வடிவில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 2024- ஆம் ஆண்டுக்குள் இதற்கான கட்டுமானப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது.  அதேபோல புதிய வளாகத்தில் 900 முதல் 1350 உறுப்பினர்கள் வரை அமர முடியும்  என்றும், கட்டட வளாகமானது முக்கோண  வடிவில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக தற்போதுள்ள சவுத் பிளாக்  பகுதிக்குப் பின்புறமாக பிரதமர் இல்லத்தை கட்டவும் , நார்த் பிளாக் பகுதிக்குப் பின்புறமாக துணைக் குடியரசுத் தலைவர் இல்லத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நாடாளுமன்ற மையப் பகுதியில் முதல் இரண்டு வரிசைகளில் இருக்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே மேசைகள் இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் புதிய அமைப்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேசைகள் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இதற்கான திட்ட வரைபடங்களை அஹமதாபாத்தைச் சேர்ந்த எப். ஹெச். சி என்னும் நிறுவனம் மேற்கொன்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com