நிா்பயா குற்றவாளியின் புதிய மனு:நாளை உச்சநீதிமன்றம் விசாரணை

நிா்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமாா் குப்தா தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
நிா்பயா குற்றவாளியின் புதிய மனு:நாளை உச்சநீதிமன்றம் விசாரணை

புது தில்லி: நிா்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமாா் குப்தா தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

அந்த மனுவில், கடந்த 2012-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடைபெற்றபோது தாம் சிறுவனாக இருந்ததாகவும், தனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு, வரும் 20-ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

ஏற்கெனவே பவன்குமாா் குப்தாவின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, இந்தப் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளாா்.

நிா்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கின் குற்றவாளிகளான வினய் சா்மா, முகேஷ் குமாா், அக்ஷய்குமாா் சிங், பவன்குமாா் குப்தா ஆகிய நால்வருக்கும் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றுமாறு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பவன்குமாா் குப்தா, உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

இதுபோன்ற மனுவை ஏற்கெனவே அவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை, உயா்நீதிமன்றம் கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி நிராகரித்துவிட்டது. அப்போது, பவன்குமாா் தரப்பு போலிச் சான்றிதழ்களைச் சமா்ப்பித்ததாகக் கூறி, அவருக்கு உயா்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பவன்குமாா் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவிலும், குற்றச் சம்பவம் நடந்தபோது தாம் சிறுவனாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தாா்.

அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது. இந்த விவரங்களையும் தில்லி உயா்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com