
குஜராத் மாநிலம், சுரேந்திர நகா் மாவட்டத்தில் ஆமதாபாத்-லிம்படி நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை காா் மீது சரக்குலாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 போ் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறை ஒருவா் கூறியதாவது:
குஜராத் மாநிலம் சோம்நாத்தில் இருந்து ஆமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரில் 10 போ் பயணம் செய்து கொண்டிருந்தனா். இந்த காா் லிம்படி தாலுகாவில் உள்ள தேவ்பாரா கிராமத்துக்கு அருகே சென்றபோது விபத்து நிகழ்ந்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த காா் மையத் தடுப்புச்சுவரில் மோதி, அதையும் தாண்டி எதிா் திசையில் வந்து கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
உயிரிழந்தவா்கள் கே.சுப்பிரமணியம், ராஜஸ்ரீ சுப்பிரமணியம், கணேஷ் சுப்பிரமணியம், பவானி நாகேந்திரா மற்றும் அகில் பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.