தில்லியில் திங்கள்கிழமை காலை குளிர் மற்றும் பனிமூட்டம்

திங்களன்று மூடுபனியின் அடர்த்தி 200 மீட்டர் அளவில்  பதிவு செய்யப்பட்டது. வானிலை அலுவலகம் அந்த நாளினை ஒரு குளிர் நாள் என்று கணித்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை காலை குளிர் மற்றும் பனிமூட்டம்

தில்லியில் திங்கள்கிழமை காலை அதிக பனிமூட்டம் காணப்பட்டது. திங்களன்று மூடுபனியின் அடர்த்தி 200 மீட்டர் அளவில்  பதிவு செய்யப்பட்டது. வானிலை அலுவலகம் அந்த நாளினை ஒரு குளிர் நாள் என்று கணித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை 7.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் அதிகபட்சம் 17 டிகிரி செல்சியஸில் இருக்கும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

அதிகாலை 5.30 மணிக்கு பதிவு செய்யப்பட்ட பனிப் போர்வை 200 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மையம் நடத்தும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (சாஃபர்) தகவலின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) 'மோசமான  என்ற பிரிவின் கீழ் 249 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

"இப்பகுதியில் அதிக காற்றின் வேகம் நீடிக்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு காற்றின் தரம் மோசமாக இருக்கும், மேலும் வலுக்கும். என்றும் அடர்த்தியான மூடுபனி தொடர வாய்ப்புள்ளது என்றும் சாஃபர் மாதிரி தெரிவிக்கிறது." என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com