பிரஜேஷ் தாக்குர் உட்பட 19 பேரும் குற்றவாளிகள்: முசாஃபர்பூர் காப்பக வழக்கில் தீர்ப்பு

முசாஃபர்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் பிரஜேஷ் தாக்குர் உட்பட 19 பேர் குற்றவாளிகள் என்று தில்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பிரஜேஷ் தாக்குர் உட்பட 19 பேரும் குற்றவாளிகள்: முசாஃபர்பூர் காப்பக வழக்கில் தீர்ப்பு


புது தில்லி: முசாஃபர்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் பிரஜேஷ் தாக்குர் உட்பட 19 பேர் குற்றவாளிகள் என்று தில்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தில்லி நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சௌரவ் குல்ஷ்ரேஷ்தா இன்று அளித்த தீர்ப்பில், போக்சோ சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட பிகார் மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பிரஜேஷ் குற்றவாளி என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பிரஜேட் உட்பட 12 ஆண்களும், 8 பெண்களும் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், 19 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, ஒருவரை விடுதலை செய்தார்.

குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் 19 பேருக்கும் தண்டனை விவரம் குறித்து ஜனவரி 28ம் தேதி வாதங்கள் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியில் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வந்த காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக மும்பையைச் சேர்ந்த டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலமாக தெரிய வந்தது. 

அதையடுத்து அங்கிருந்த 42 சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இந்த விவகாரத்தில் அந்த காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பிரஜேஷ் தாக்குருக்கும், அந்த மாநில சமூக நலத் துறை அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதையடுத்து மஞ்சு வர்மா பதவி விலகினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com