Enable Javscript for better performance
நிர்பயா வழக்கு: பவன்குமார் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு இந்தியா

    நிர்பயா வழக்கு: பவன்குமார் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    By PTI  |   Published On : 20th January 2020 03:59 PM  |   Last Updated : 20th January 2020 03:59 PM  |  அ+அ அ-  |  

    Nirbhaya_case_convicts

     

    புது தில்லி: நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

    குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என்ற முறையீட்டை தில்லி உயர்நீதிமன்றம் ஏற்காததை எதிர்த்து குற்றவாளி பவன்குமார் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்திருந்தார்.

    பவன்குமார் குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அஷோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

    2012, டிசம்பா் 16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் ‘நிா்பயா’ என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாா். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ‘நிா்பயா’, சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா்.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 போ்களில் ராம் சிங் என்பவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறாா் பிரிவின் கீழ் வந்ததால், அவா் தொடா்பான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த வழக்கில் அவா் தண்டனை விதிக்கப்பட்டு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

    விசாரணை முடிவில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில், குற்றம் நடந்த போது தான் சிறுவன் என்று குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் தாக்கல் செய்த மனுவை, தில்லி உயர் நீதிமன்றம் ஏற்காமல் தள்ளுபடி  செய்துவிட்டது. அதனையடுத்து குற்றவாளிகள் வினய் ஷர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல மற்றொரு குற்றவாளியான முகேஷ் சிங் சார்பாகத் தாக்கல் செய்யபட்டிருந்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர்  வெள்ளிக்கிழமை நிராகரித்துவிட்டார். 

    தொடர்ந்து நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடும் ஆணையை வழங்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வெள்ளியன்று மனுத் தாக்கல் செய்தது. நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தில்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது.

    இந்நிலையில் நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
     


    TAGS
    nirbhaya

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp