சி.ஏ.ஏ., வேலைவாய்ப்பின்மை குறித்து மாணவர்கள், விவசாயிகளுடன் பேசுகிறார் ராகுல் காந்தி

ஜெய்ப்பூரில் வருகிற 28ம் தேதி மாணவர்கள், விவசாயிகளை சந்தித்து நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசவுள்ளார். 
சி.ஏ.ஏ., வேலைவாய்ப்பின்மை குறித்து மாணவர்கள், விவசாயிகளுடன் பேசுகிறார் ராகுல் காந்தி

ஜெய்ப்பூரில் வருகிற 28ம் தேதி மாணவர்கள், விவசாயிகளை சந்தித்து நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசவுள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுடன் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளார். இதில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேலைவாய்ப்பின்மை, தற்போதைய பொருளாதார நிலை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து அவர்களுடன் விவாதிக்க உள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடியது குறித்து, பாஜக தலைமையிலான அரசு இளைஞர்களின் குரலை அடக்குகிறது என்று ராகுல் குற்றம் சாட்டியிருந்தார். 

அதுமட்டுமின்றி, 'இளைஞர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக, நாட்டை திசைதிருப்பவும் மக்களைப் பிளவுபடுத்தவும் பாஜக அரசு முயற்சிக்கிறது. இளைஞர்களின் குரலை அடக்கக்கூடாது; அரசு அவர்களின் குரலை கேட்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது ஏன் என பிரதமர் மோடி போலீஸ் பாதுகாப்பின்றி எந்தவொரு பல்கலைக்கழகத்திற்குச் சென்று இளைஞர்கள் முன்னிலையில் விளக்கம் தெரிவிக்க வேண்டும். இது அவருக்கு நான் விடும் சவால்' என்று கூறியிருந்தார். 

இந்த சூழ்நிலையிலேயே அவர் வருகிற 28ம் தேதி ஜெய்ப்பூரில் மாணவர்கள், விவசாயிகளை சந்தித்து நாட்டின் பிரச்னைகள் குறித்து பேசவிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com