மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பதுவே இலக்கு: பாஜக புதிய தலைவர் ஜெ.பி. நட்டா

தேர்தலில் வெற்றி காணாத மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று அக்கட்சியின் புதிய தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இலக்கு நிர்ணயித்துள்ளார்.
மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பதுவே இலக்கு: பாஜக புதிய தலைவர் ஜெ.பி. நட்டா


தேர்தலில் வெற்றி காணாத மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று அக்கட்சியின் புதிய தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இலக்கு நிர்ணயித்துள்ளார்.

பாஜகவின் தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா இன்று (திங்கள்கிழமை) ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கட்சி தலைமையகத்தில் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய ஜெ.பி. நட்டா,

"பாஜக புதிய உச்சங்களைத் தொட அனைத்து நிர்வாகிகளுடன் இணைந்து இரவு பகல் பாராமல் பணியாற்றுவேன். இந்தியாவில் ஆட்சியில் உள்ள நாம்தான் இன்றைக்கு உலகின் மிகப் பெரிய கட்சி. நாட்டில் நமக்கு அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். நாம் இத்துடன் நிற்கப்போவதில்லை. இன்னும் சில மாநிலங்கள் மீதமுள்ளன. அந்த மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம் என்பதை உறுதி செய்வோம்.

நாம் நமது கொள்கைகளில் மட்டும் வேறுபடவில்லை. கொள்கைகளினால் ஏற்படும் விளைவுகளிலும் நாம் வேறுபட்டு இருக்கிறோம்.

ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாமல் இருக்கும் என்னைப் போன்ற எளிய நிர்வாகி ஒருவருக்கு இப்படி ஒரு பொறுப்பு வழங்கப்படுகிறது என்றால் அது பாஜகவின் சிறப்பம்சமாகும். அது பாஜகவில் மட்டும்தான் சாத்தியமாகும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com