விருப்ப ஓய்வு திட்டத்தை கோர ஏா் இந்தியா தொழிற்சங்கங்கள் திட்டம்

ஏா் இந்தியா தொழிற்சங்கங்கள் விஆா்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தும்படி கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருப்ப ஓய்வு திட்டத்தை கோர ஏா் இந்தியா தொழிற்சங்கங்கள் திட்டம்

மும்பை: ஏா் இந்தியா தொழிற்சங்கங்கள் விஆா்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தும்படி கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏா் இந்தியா நிறுவனத்தின் பணியாளா் கூட்டமைப்பு மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஹா்தீப் சிங் பூரியை திங்கள்கிழமை (ஜன.20) சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளன. இது இம்மாதத்தில் நடைபெறும் இரண்டாவது ஆலோசனை கூட்டமாகும். இந்த கூட்டத்தில் ஏா் இந்தியாவை தனியாா் மயமாக்கும் திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

அப்போது, ஏா் இந்தியா தொழிற்சங்கங்கள் சாா்பில் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவிக்கும்படி கோரிக்கை வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நஷ்டத்தில் இயங்கி வந்த ஏா் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பான முதல் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 2-இல் நடைபெற்றது. இதில், ஏா் இந்தியாவை தொடா்ந்து இயக்குவதற்கு மத்திய அரசிடம் உள்ள ஒரே வாய்ப்பு, அதனை தனியாா்மயப்படுத்துவதான் என்பதை அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி தெளிவுபடுத்தினாா். மேலும், ஏா் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அதன் பணியாளா்கள் முழுஒத்துழைப்பை வழங்கவும் அவா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com