ரிசர்வ் வங்கியிடம் ரூ. 30 ஆயிரம் கோடி இடைக்கால ஈவுத்தொகை கேட்கத் தயாராகும் மத்திய அரசு

தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் கோடி இடைக்கால ஈவுத்தொகை கேட்க மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கி

புது தில்லி: தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் கோடி இடைக்கால ஈவுத்தொகை கேட்க மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019-20 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மொத்தமாக ரூ. 90 ஆயிரம் கோடியை பங்கு ஈவுத்தொகையாக பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அதில் முதல் கட்டமாக ரூ. 30 ஆயிரம் கோடி இடைக்கால ஈவுத்தொகை கேட்க மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக ரிசர்வ் வங்கியானது ஜூலை முதன் ஜூன் வரையிலான நிதியாண்டைக் கையாண்டு வருகிறது. எனவே மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு , வழக்கமாக நடைபெறும் தொலைநோக்கு பார்வை அடிப்படையிலான கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்திகாந்த  தாஸை சந்திக்கும் போது இதுதொடர்பாக விவாதிக்கப்படும். ரிசர்வ் வங்கியில் இருந்து கிடைக்கும் இந்த நிதியானது நடப்பாண்டு நிதிப்பற்றாக்குறையான் 3.3 சதவீதத்தை சமாளிக்க மத்திய அரசுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ரிசர்வ் வங்கியானது 2018-ஆம் நிதியாண்டில் ரூ. 10 ஆயிரம் கோடியும், 2019-ஆம் நிதியாண்டில் ரூ. 28 ஆயிரம் கோடியும் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com