புதுச்சேரியில் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை

புதுச்சேரியில் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்று மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்
கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்று மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் படி 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்ததது. அதற்கு ஏற்ப தமிழகத்திலும் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.  அதுகுறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் செவ்வாயன்று விளக்க ம் அளித்திருந்தார்.

இந்நிலையில்  புதுச்சேரியில் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்று மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை.

பழைய முறையிலேயே மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும்.

ஆனால் மாணவர்கள் தேர்வு எழுதும் பள்ளிகளில் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட மாட்டார்கள்.

வேறு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அந்தப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com