ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய சிறுவன் உட்பட தேசிய வீரதீர விருதுக்கு 22 சிறார்கள் தேர்வு

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 2 சிறுவர்கள் மற்றும் கர்நாடகாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஆபுலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன் உட்பட 22 பேர் வீரதீர விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய சிறுவன் உட்பட தேசிய வீரதீர விருதுக்கு 22 சிறார்கள் தேர்வு


புது தில்லி: ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 2 சிறுவர்கள் மற்றும் கர்நாடகாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஆபுலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன் உட்பட 22 பேர் வீரதீர விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்திய குழந்தைகள் நல வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஆண்டுக்கான வீரதீர விருதுக்கு 10 சிறுமிகள், 12 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடலில் அடித்துச் செல்லப்பட இருந்த தனது 3 நண்பர்களை மீட்டு, தன்னுயிரை இழந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் முகம்மது முஹ்சின் அபிமன்யு விருதை மரணத்துக்குப் பிறகு பெறுகிறார்.

கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளத்தில் சிக்கியவர்களை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸுக்கு வழி காட்டிய வெங்கடேஷ் (11) என்ற சிறுவனும் வீரதீர விருதுக்கு தேர்வாகியுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com