ககன்யான் திட்டம்: விண்வெளிக்குச் செல்லும் மனித ரோபோ!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், முதலில் மனித உருவிலான ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 
ககன்யான் திட்டம்: விண்வெளிக்குச் செல்லும் மனித ரோபோ!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், முதலில் மனித உருவிலான ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக இறங்கியுள்ளது. விண்வெளிக்கு அனுப்ப 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரஷியா சென்று பயிற்சி பெறவுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இத்திட்டத்தின் சோதனை முயற்சியாக, விண்வெளிக்கு அனுப்ப மனித உருவிலான பெண் ரோபோவை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். விண்வெளிக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் இன்று அறிமுக்கப்படுத்தியுள்ளார். நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்த ரோபோ விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

விண்வெளிக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ரோபோவுக்கு ‘வயோமமித்ரா' என பெயரிடப்பட்டுள்ளது. பெண் உருவம் கொண்ட இந்த ரோபோ மனிதர்கள் செய்யும் பல வேலைகளை திறமையாக செய்யக்கூடியது; இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது. மனிதப் பண்புகளும் இருப்பதால் விண்வெளியின் மனிதன் சென்று வர ஏதேனும் பிரச்னைகள் இருக்குமா என்பது குறித்தும் உணரக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com