2 கோடி வங்கதேச முஸ்லிம்கள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர்: மேற்கு வங்க பாஜக தலைவர்

2 கோடி வங்கதேசத்தினர் இந்தியாவில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
2 கோடி வங்கதேச முஸ்லிம்கள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர்: மேற்கு வங்க பாஜக தலைவர்

2 கோடி வங்கதேசத்தினர் இந்தியாவில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளதாகவும் அவர்களில் 1 கோடி பேர் மேற்கு வங்கத்தில் இருப்பதாகவும் மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,

வங்கதேசத்தைச் சேர்ந்த 2 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர். அவர்களில் 1 கோடி முஸ்லிம்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இதர 1 கோடி பேர் நாடு முழுவதும் பரவியுள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை இங்கு தங்க அனுமதிக்கப்போவதில்லை. ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டையில் அவர்கள் பெயர் இடம்பெற்றிருந்தால், அவற்றை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோதமாக ஊடுருவிய முஸ்லிம்களின் பெயர்கள் நீக்கப்படுவதன் மூலம் 2021 பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கி தானாகச் சரியும். அதுமட்டுமல்லாமல் இந்த தேர்தலில் பாஜக 200 இடங்களைக் கைப்பற்றப்போவது உறுதி, மம்தா பானர்ஜி 50 இடங்களைக் கூட பெறமாட்டார் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com