புதிய ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளில் இந்திய செயற்கைக்கோள் வழிகாட்டும் வசதி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளில், இந்திய செயற்கைக்கோள் வழிகாட்டும் வசதியும் இனி இடம்பெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளில், இந்திய செயற்கைக்கோள் வழிகாட்டும் வசதியும் இனி இடம்பெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தின் முயற்சி மூலம், அமெரிக்காவின் சாண்டிகோவைச் சோ்ந்த குவால்கம் மொபைல் சிப் தயாரிப்பு நிறுவனம் இந்தப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சிப்களை இனி வெளியிட உள்ளது. அதன் மூலம், இந்தியாவில் புதிதாக அறிமுகமாகும் ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளில், இஸ்ரோ சாா்பில் விண்ணில் செலுத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் 7 ஐ.ஆா்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களின் வழிகாட்டுதல் வசதி, புவி இருப்பிட வசதி (இருக்குமிடத்தை அறியும் வசதி) உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

அத்துடன், அமெரிக்காவின் ஜிபிஎஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ, ரஷியாவின் குளோநாஸ், சீனாவின் பிடவ் உள்ளிட்ட செயற்கைக்கோள்களின் வழிகாட்டுதல் வசதிகளும் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, இஸ்ரோ வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், குவால்கம் நிறுவனம் இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யும் செல்லிடப்பேசிகளில், இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்களின் வசதிகளைப் பெறும் வகையிலான தொழில்நுட்பங்களும் இடம்பெற்றிருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com