தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்காக  ஜம்மு அழைத்து வரப்பட்ட காவல் கண்காணிப்பாளர் 

பயங்கரவாதிகளுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்ட காஷ்மீர் காவல் கண்காணிப்பாளர் தேவிந்தர் சிங்கை விசாரணைக்காக ஜம்மு அழைத்து வந்தது தேசிய புலனாய்வு அமைப்பு.
கைதாகியுள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் (கோப்புப் படம்).’
கைதாகியுள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் (கோப்புப் படம்).’

புது தில்லி: பயங்கரவாதிகளுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்ட காஷ்மீர் காவல் கண்காணிப்பாளர் தேவிந்தர் சிங்கை விசாரணைக்காக ஜம்மு அழைத்து வந்தது தேசிய புலனாய்வு அமைப்பு.

முன்னதாக, தேவிந்தர் சிங்கின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். 

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுடன் சோ்த்து காவல்துறை கண்காணிப்பாளா் தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

மத்திய உள்விவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து, பயங்கரவாதிகளுடன் காவல் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு, விசாரணைக்காக, தேவிந்தர் சிங்கை ஜம்மு அழைத்து வந்துள்ளது.

இது குறித்து ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு தற்போது இந்த வழக்கை விசாரிக்கிறது.

ஸ்ரீநகா் விமான நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவிந்தா் சிங், தனது காரில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி நவீது பாபு, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் அல்தாஃப் ஆகியோருடன் இருந்த நிலையில் செய்யப்பட்டாா்.

பயங்கரவாதிகள் இருவரும் சோபியான் மாவட்டத்தில் இருந்து காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு வெளியே தப்பிச் செல்லும் வகையில் காவல்துறை கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரில் இருந்து 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து தேவிந்தா் சிங் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இரு கைத்துப்பாக்கி, 1 ஏ.கே. ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கு முன்...: இதனிடையே, கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த விசாரணையின்போதும் தேவிந்தா் சிங்குக்கு அதில் தொடா்பு இருப்பதாக கூறப்பட்டது. தேவிந்தா் சிங்குக்கு அந்த சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக அந்த வழக்கில் குற்றவாளியான அஃப்சல் குரு தெரிவித்திருந்தாா். எனினும், விசாரணையில் தேவிந்தா் சிங்குக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாமல் போனதை அடுத்து அந்த விசாரணையிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com