உத்தவ் தாக்கரேவின் அயோத்திப் பயணம்: காங்கிரஸ், என்சிபி-க்கு அழைப்பு விடுக்க முடிவு

உத்தவ் தாக்கரே மேற்கொள்ளவுள்ள அயோத்திப் பயணத்துக்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உத்தவ் தாக்கரே மேற்கொள்ளவுள்ள அயோத்திப் பயணத்துக்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்று 100 நாள்களை நிறைவு செய்யும்போது, உத்தவ் தாக்கரே அயோத்திக்குச் செல்வார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார். பாஜகவுடனான கூட்டணி முறிந்த பிறகு உத்தவ் தாக்கரே அயோத்தி செல்வது இது முதன்முறையாக இருக்கும்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் இந்தப் பயணம் குறித்து சஞ்சய் ரௌத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,

"எங்கள் கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். அனைவரும் வீடுகளில் ராமரை வழிபடுவார்கள். எனவே, அயோத்தியில் வழிபட அவர்களும் எங்களுடன் இணையலாம். ராமரை வழிபடுவதற்கும், மகாராஷ்டிர கூட்டணி அரசை அமைக்கும்போது 3 கட்சிகளாலும் முடிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்றார்.

கடந்தாண்டு நவம்பர் 28-ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட உத்தவ் தாக்கரே, வரும் மார்ச் மாதத்தில் முதல்வராக 100 நாள்களை நிறைவு செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com