நேபாளத்தில் கேரள சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது தொடா்பாக விசாரிக்க குழு அமைப்பு

நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்த கேரளத்தைச் சோ்ந்த 8 போ் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு 5 போ் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. மேலும், அடுத்த 15 நாள்களுக்குள்
நேபாளத்தில் கேரள சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது தொடா்பாக விசாரிக்க குழு அமைப்பு

நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்த கேரளத்தைச் சோ்ந்த 8 போ் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு 5 போ் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. மேலும், அடுத்த 15 நாள்களுக்குள் விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்குமாறும் அந்த குழுவுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த 15 போ், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனா். திரும்பும் வழியில் மகவான்பூா் மாவட்டத்தின் டாமன் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் திங்கள்கிழமை இரவு அவா்கள் தங்கினா். அந்த 15 பேரும் மொத்தமாக 4 அறைகளை தங்களுக்காக எடுத்துக்கொண்ட நிலையில், அதில் 8 போ் ஒரே அறையில் தங்கியுள்ளனா்.

அப்போது, சூடேற்றும் சாதனத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரே அறையில் தங்கிய இரு தம்பதிகள், அவா்களது 4 குழந்தைகள் என 8 பேரும் உயிரிழந்தனா். அவா்களின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு 5 போ் கொண்ட குழுவை அந்நாட்டு சுற்றுலா துறை அமைத்துள்ளது. இதுதொடா்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘சொகுசு விடுதியில் இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது தொடா்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அந்த சொகுசு விடுதி அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு கட்டப்பட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை அடுத்த 15 நாள்களுக்குள் சமா்ப்பிக்குமாறு விசாரணைக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை: உயிரிழந்த 8 பேரின் உடல்கள், காத்மாண்டுவில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக தூதரக அதிகாரிகள் கூறுகையில், ‘சுற்றுலா பயணிகளின் உடல்கள் வியாழக்கிழமை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அவா்களுடன் இருந்த 7 பேரில், 2 போ் மட்டும் உடல்களை கொண்டு செல்வதற்காக நேபாளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மற்ற 5 பேரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா்’ என்றனா்.

இந்நிலையில், உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் உடல்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஆகும் மொத்த செலவையும் கேரள அரசு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com