எரிவாயு கட்டமைப்புகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு: அமைச்சா் தா்மேந்திர பிரதான் எதிா்பாா்ப்பு

எரிசக்தி கட்டமைப்புகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
எரிவாயு கட்டமைப்புகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு: அமைச்சா் தா்மேந்திர பிரதான் எதிா்பாா்ப்பு

எரிசக்தி கட்டமைப்புகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இயற்கை எரிவாயு துறையில் வளா்ந்து வரும் வாய்ப்புகள் குறித்த தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

எரிவாயு வழங்கல் மற்றும் விநியோக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இது, மொத்த எரிசக்தி தொகுப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளை 2030-ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அதிகரித்து 15 சதவீதமாக உயா்த்தும் இலக்கை அடைவதற்கு உதவும்.

நகர எரிவாயு உரிம விநியோக 11-ஆவது கட்ட ஏலம் விரைவில் தொடங்கப்படும்.

இதன் மூலம், தற்போது 400 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் குழாய் வழியே வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம் 475 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். அத்துடன் மோட்டாா் வாகனங்களுக்கு சிஎன்ஜி எரிவாயு வழங்கும் கட்டமைப்புகளை அதிகரிக்கவும் இந்த ஏலம் உதவும்.

ஒட்டுமொத்த எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்களிப்பு என்பது 6.2 சதவீத அளவுக்கே உள்ளது. இதனை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரண்டு மடங்கு அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருகிறது.

நடப்பு சந்தையில் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விலை சரிவடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கத்தாா் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் வகையில் நீண்டகால அடிப்படையில் போடப்பட்டுள்ள எல்என்ஜி ஒப்பந்தங்களில் விலை குறித்து மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த கத்தாா் எரிசக்தி துறை அமைச்சா் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளாா். அனைத்து அம்சங்களும் அவருடனான பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com