5 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் 2ஜி இன்டர்நெட் சேவை

ஜம்மு காஷ்மீரில் 2ஜி இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு சுமார் 5 மாதங்களுக்கும் மேல் ஆன நிலையில், இன்று முதல் அங்கு இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது.
5 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் 2ஜி இன்டர்நெட் சேவை


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2ஜி இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு சுமார் 5 மாதங்களுக்கும் மேல் ஆன நிலையில், இன்று முதல் அங்கு இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது.

ஆனால், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளித்திருக்கும் 301 இணையதளங்களை மட்டுமே ஜம்மு காஷ்மீர் மக்கள் பயன்படுத்த முடியும் என்று அதன் முழுப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் உள்துறை அமைச்சம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு செல்போன்களில் சனிக்கிழமை முதல் இணையச் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளித்திருக்கும் இணையதளங்களை மட்டுமே பயனாளர்கள் பயன்படுத்த முடியும், சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் ப்ரீ பெய்ட் செல்போன் சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை வழங்கப்பட்ட நிலையில், தற்போது இணையச் சேவையும் வழங்கப்பட்டுள்ளது.

வங்கி, கல்வி, செய்தி, பயணம், வேலை வாய்ப்பு சம்பந்தமான இணையதளங்களைப் பயன்படுத்த மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறந்து அந்துஸ்து வழங்க வகை செய்து வந்த சட்டப்பிரிவு 370ஐ, ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அங்கு அனைத்து விதமான தொலைத்தொடர்பு வசதிகளும் நிறுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com