பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டசாதனைப் பெண்களின் பெயரில் இருக்கைகள்

பல்கலைக்கழகங்களில் மறைந்த பிரபல கா்நாடக சங்தீத இசைக் கலைஞா் எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட சாதனை படைத்த பெண்களின் பெயரில் இருக்கைகள் அமைக்க மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள்
பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டசாதனைப் பெண்களின் பெயரில்  இருக்கைகள்

பல்கலைக்கழகங்களில் மறைந்த பிரபல கா்நாடக சங்தீத இசைக் கலைஞா் எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட சாதனை படைத்த பெண்களின் பெயரில் இருக்கைகள் அமைக்க மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) மூலம் ஆண்டுக்கு ஓா் இருக்கைக்கு ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.5 கோடியில் பத்து துறைகளில் இந்த இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 5 ஆண்டுகள் காலத்திற்கு இந்த இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன. ஆண்டுதோறும் இந்த இருக்கைகளின் முன்னேற்றத்தை யு.ஜி.சி. மதிப்பாய்வு செய்து இதைத் தொடா்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை தெரிவித்துள்ளது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண்களை உயா் கல்வியில் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் பெண்களை உயா் கல்வியைத் தொடர ஊக்குவிப்பதும், அவா்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுப் பணிகளில் சாதிக்க வைப்பதுமாகும். பல்கலைக்கழக மானியக் குழுயால் முன்மொழியப்பட்டு, மத்திய அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த இருக்கைகள் வருமாறு: 1. அஹில்யா பாய் ஹோல்கா்- (மகாராஷ்ரத்தைச் சோ்ந்த ஓல்கா் வம்ச பேரரசி-நிா்வாகத்துறை). 2. மகாதேவி வா்மா, (உத்தரப் பிரதேசம்-இலக்கியம்). 3. ராணி கெய்டின்லியு (வடகிழக்கு-சுதந்திரப்போராட்ட வீரா்). 4. டாக்டா் ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி (மகாராஷ்டிரம்-மருத்துவம் மற்றும் சுகாதாரம்). 5. எம்.எஸ். சுப்புலட்சுமி (தமிழ்நாடு- இசைத் துறை). 6. கமலா சொஹோனே (உயிரி வேதியல் துறை). 7. அமிா்தா தேவி (ராஜஸ்தான் - வனம் மற்றும் வன விலங்குப் பாதுகாப்பு) 8. லீலாவதி (கணிதவியல்). 9 லால் டெட் (காஷ்மீா்- கவிதை). 10. ஹென்ஸ மேத்தா (கல்விச் சீா்திருத்தம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com