அஸ்ஸாமில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு

நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அஸ்ஸாம் மாநிலத்தில் 5 வெவ்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடித்தது.
அஸ்ஸாமில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு

நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அஸ்ஸாம் மாநிலத்தில் 5 வெவ்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடித்தது.

திபுர்காரில் 2 இடங்களிலும், சோனரி, துலியாஜன் மற்ரும் தூம்தூமா ஆகிய இடங்களிலும் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மாநில போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவல் சுட்டுரையில் பதிவிட்டதாவது,

குண்டு வெடிப்புச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் தீவிரவாதக் குழுக்களை புறக்கணித்ததன் விரக்தியில் இந்தப் புனித நாளில் தீவிரவாதிகள் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

ஐக்கிய விடுதலை முன்னணி (யுஎல்எஃப்ஏ) அமைப்பு இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருக்காலம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே குடியரசு தினத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என இந்த அமைப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 8 தடை செய்யப்பட்ட குழுக்களைச் சேர்ந்த 644 பேர் குவஹாட்டியில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 50 பேர் இந்த யுஎல்எஃப்ஏ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com