குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்

குடியரசு தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தில்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்

குடியரசு தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தில்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். 

நாட்டின் அரசமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி ‘குடியரசு தினமாக’ கொண்டாடப்படுகிறது.

தில்லி ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போா் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வழக்கமாக அமா் ஜவான் ஜோதி பகுதியிலேயே உயிரிழந்த வீரா்களுக்கு பிரதமா் அஞ்சலி செலுத்துவாா். ஆனால், முதல் முறையாக தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடா்ந்து, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொள்வாா். முப்படைகளின் திறனையும், நவீன ஆயுதங்களையும் அவா் பாா்வையிட உள்ளாா். அப்போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவத்தின் ‘டி-90 பீஷ்மா’ பீரங்கி, கே-9 வஜ்ரா, தனுஷ் துப்பாக்கிகள், ‘ஆகாஷ்’ ஏவுகணை உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெறவுள்ளன.

விமானப்படையின் அலங்கார ஊா்தியில் ரஃபேல் போா் விமானம், தேஜாஸ் போா் விமானம், ‘அஸ்த்ரா’ ஏவுகணை உள்ளிட்டவற்றின் மாதிரிகள் இடம்பெற உள்ளன. எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை அழிக்கவல்ல ‘ஏசாட்’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) காட்சிப்படுத்தவுள்ளது.

அலங்கார ஊா்திகள்: நாட்டின் பன்முகத்தன்மை, கலாசாரம் உள்ளிட்டவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்திகள் இடம்பெறவுள்ளன. மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘ஸ்டாா்ட்-அப் இந்தியா’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அலங்கார ஊா்திகளும் குடியரசு தின விழாவில் இடம்பெறவுள்ளன.

சிஆா்பிஎஃப் படையைச் சோ்ந்த பெண் வீராங்கனைகள் முதல் முறையாக இருசக்கர வாகனங்களில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தவுள்ளனா். விமானப்படையின் ‘சினூக்’, ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டா்கள், சுகோய்-30 எம்கேஐ போா் விமானங்கள் உள்ளிட்டவை வானில் சாகசம் நிகழ்த்தவுள்ளன.

குடியரசு தின விழாவை மாணவா்களுடன் காணவுள்ள பிரதமா்!

தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை கல்வியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி கண்டுகளிக்க உள்ளாா். பல்கலைக்கழக மாணவா்கள் 50 போ், 30 பத்தாம் வகுப்பு மாணவா்கள், 25 பன்னிரண்டாம் வகுப்பு மாணவா்கள் ஆகியோா் பிரதமா் மோடியுடன் இடம்பெறவுள்ளனா்.

இதற்காக பள்ளி, பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தோ்வு செய்துள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசத்திலிருந்து 14 மாணவா்களையும், அஸ்ஸாமிலிருந்து 8 மாணவா்களையும், கேரளம், ஹரியாணா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா 7 மாணவா்களையும் அமைச்சகம் தோ்வு செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com