
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 76,964 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 26,575 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 2 அறைகளில் மட்டுமே பக்தா்கள் காத்திருந்தனா். அவா்களுக்கு 4 மணிநேரத்திற்கு பின் தரிசனம் வழங்கப்பட்டது. திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்றவா்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினா்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயிலில் 11,868 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் 8,949 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 18,480 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரா் கோயிலில் 5,528 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் 3,390 பக்தா்களும் சனிக்கிழமை முழுவதும் தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.
சோதனைச் சாவடி வசூல்: அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 87,085 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனா். 10,103 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.10 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.