காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவியின் உடல் ஏரியில் கண்டெடுப்பு

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய-அமெரிக்க மாணவியின் உடல் இந்தியானா
காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவியின் உடல் ஏரியில் கண்டெடுப்பு

வாஷிங்டன்:  அமெரிக்காவில் காணாமல் போன இந்திய-அமெரிக்க மாணவியின் உடல் இந்தியானா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

நோட்ரோ டேம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்து வந்த மாணவி அன்ரோஸ் ஜெர்ரி (21). இவர் கடந்த 21-ம் தேதியிலிருந்து காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகின.

காணாமல் போன மாணவி அன்ரோஸ் ஜெர்ரின் உடல் அங்குள்ள செயின்ட் மேரிஸ் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

ஜெர்ரியின் உடல் சடலமாக மீட்கப்படும்போது அவர் பயன்படுத்திய தொலைபேசி  மற்றும் இயர்பட்ஸ் அவளுடன் அப்படியே இருந்ததாகவும், நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் மேற்கொள்ளும் போது ஜெர்ரி தற்செயலாக ஏரியில் விழுந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அவள் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

நோட்ரே டேம் பல்கலை மாணவி ஜெர்ரியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளத்தில் பிறந்தவர் ஜெர்ரி. இவர் கடந்த 2000-ம் ஆண்டில் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். இவளது தந்தை ஜெர்ரி ஜேம்ஸ் ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர், தாய் ரெனி ஜெர்ரி பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com