என்ஆர்சிக்கு பதிலாக வேலையில்லாதோர் பட்டியலை தயாரிக்கலாம்: திக்விஜய் சிங் யோசனை

தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயாரிப்பதற்கு பதிலாக மத்திய அரசு, படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களின் பட்டியலைத் தயாரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
என்ஆர்சிக்கு பதிலாக வேலையில்லாதோர் பட்டியலை தயாரிக்கலாம்: திக்விஜய் சிங் யோசனை


புது தில்லி: தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயாரிப்பதற்கு பதிலாக மத்திய அரசு, படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களின் பட்டியலைத் தயாரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் எனது நேர்மறையான யோசனையை அளிக்கிறேன். மத்திய அரசு முடிவு செய்திருக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தேசிய அளவில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இந்தியக் குடிமக்களின் பதிவேட்டைத் தயாரிக்கலாம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் மோசமான கொள்கை முடிவுகளால், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கடுமையாக விமரிசனம் செய்து வரும் நிலையில், அக்கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com