சிஏஏ உள்நாட்டு விவகாரம்: வெங்கய்ய நாயுடு

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இடமளிக்கவில்லை என வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 
சிஏஏ உள்நாட்டு விவகாரம்: வெங்கய்ய நாயுடு


இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இடமளிக்கவில்லை என வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 

புதுதில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிறகு பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசின் வரம்புக்குட்பட்ட விவகாரங்களில் வெளிநாட்டு அமைப்புகள் தலையிடுவது கவலையளிக்கிறது என்றார். மேலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மற்ற நாடுகளுக்கு எந்த வாய்ப்பும் இடமளிக்கவில்லை என்று கூறிய அவர், இது போன்ற கருத்துகளை வெளியிடுவதை அவர்கள் எதிர்காலங்களில் தவிர்ப்பார்கள் என்பதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் 6 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்தத் தீர்மானங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விவாதம் நடத்தவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com