நிர்பயா குற்றவாளியின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

நிர்பயா குற்றவாளி பவன் குமாரின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனுவை தில்லி நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா சம்பவம்
நிர்பயா சம்பவம்

நிர்பயா குற்றவாளி பவன் குமாரின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனுவை தில்லி நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமாரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக அவரது தந்தை தில்லி நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நிர்பயா சம்பவம் நிகழ்ந்தபோது குற்றவாளி பவன் குமார் சிறுவன் என்றும், அவரது தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று விசாரணையில் வாதிடப்பட்டது. எனினும், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

முன்னதாக, தூக்குத் தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் பவன் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நிர்பயாவின் தாயார், இது குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை தாமதப்படுத்துவதற்கான ஒரு தந்திரம். அவரது மனு ஏற்கெனவே 2013ல் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மறுஆய்வு மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மேலும் மேலும் மனுக்களை தாக்கல் செய்து நேரத்தை வீணாக்கும் செயல். நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து குற்றவாளிகளும் பிப்ரவரி 1ல் தூக்கிலிடப்பட வேண்டும்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com