ஒமர் அப்துல்லாவின் புகைப்படம் வருத்தமளிக்கிறது: ஸ்டாலின் ட்வீட்

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா மற்றும் வீட்டுச்சிறையில் உள்ள பிற அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள
ஸ்டாலின்
ஸ்டாலின்

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா மற்றும் வீட்டுச்சிறையில் உள்ள பிற அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால் நாடாளுமன்ற அவையில் நிறைவேற்றப்பட்டன. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையின்போது, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக்  அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தின.

இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்றை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் ஒமர் அப்துல்லா நீண்ட தாடியுடன், பனிமூடிய சூழ்நிலையில் கம்பளித் தொப்பி அணிந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

மேலும், 'ஒமர் அப்துல்லா அடையாளம் காண முடியாத அளவிற்கு இருக்கிறார். ஜனநாயக நாட்டில்தான் நாம் இருக்கிறோமா? இது எப்போது முடிவுக்கு வரும்' என்று மம்தா கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல மாதங்களாக வீட்டுக்காவலில் உள்ள ஒமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வருத்தமளிக்கிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா மற்றும் வீட்டுச்சிறையில் உள்ள பிற அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டு காஷ்மீரில் விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், ஒமர் அப்துல்லாவின் பழைய படத்தையும் அவர் இணைத்து வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com