மேற்கு வங்கத்தில் போராட்டத்தின் இடையே ஏற்பட்ட வன்முறையில் இருவர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் முர்ஷிதாபாத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் இருவர் உயிரிழந்தனர். 
மேற்கு வங்கத்தில் போராட்டத்தின் இடையே ஏற்பட்ட வன்முறையில் இருவர் பலி

மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் இருவர் உயிரிழந்தனர். 

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் இடையே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த சில நபர்கள், போராட்டக்காரர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில்  இருவர் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனிருத் பிஸ்வாஸ் மற்றும் மக்பூல் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதுகுறித்து கூறுகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாஹேப்நகர் உள்ளூர்வாசிகள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வந்து மக்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், இந்த வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் என்று திரிணமூல் கட்சியினர் தெரிவிக்கினறனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com