இனி ஆசிரியர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணி செய்யலாம்!

இசை, கலாச்சாரம் மற்றும் கற்றல் ஆகியவற்றின் இந்துக் கடவுளாகக் விளங்கும் சரஸ்வதி பூஜை இன்று (புதன்கிழமை) மேற்கு வங்காளம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.
இனி ஆசிரியர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணி செய்யலாம்!

இசை, கலாச்சாரம் மற்றும் கற்றல் ஆகியவற்றின் இந்துக் கடவுளாகக் விளங்கும் சரஸ்வதி பூஜை இன்று (புதன்கிழமை) மேற்கு வங்காளம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

இந்தப் பண்டிகையின் பெயர் பசந்த் பஞ்சமி, அதாவது வசந்த காலத்தின் வருகையை அறிவித்தல் என்பதாகும். புதன்கிழமை முதல் வியாழக்கிழமை காலை வரை இது நீடிக்கும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல வீடுகளில் வியாழக்கிழமை அன்று வழிபாடு தொடங்கும்.

பாரம்பரிய மஞ்சள் நிறப் புடவைகளில் பெண்கள் தங்களை நன்றாக அலங்கரித்துக் கொள்வார்கள். ஆண்களும் சிறுவர்களும் குர்தா அணிந்து கொள்வார்கள். தங்களது இஷ்ட தெய்வத்தை பூக்களால் அர்ச்சித்து வழிபடுவர். அக்கம் பக்கம் கிராமங்களில் குடும்பங்களுக்குள் "பிரசாதம்" பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இந்தப் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

பொதுவாக இந்தப் பண்டிகை குழந்தைகளுக்கு மகிழ்ச்சியின் நாள். காரணம் பாடப் புத்தகங்களை பூஜையில் வைத்து விடுவதால் இன்று படிக்கத் தேவையில்லை. கல்வி நிறுவனங்கள் மற்றும் அடுக்ககங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கலாச்சார விழாக்களில் பங்கேற்பார்கள்.

புருவத்தில் பிறை நிலவுடன் சரஸ்வதி தேவியின் களிமண் வடிவச் சிலைகள் காணப்பட்டன, அன்னப் பறவை அருகே இருக்க வெண்தாமரையின் மீது வீற்றிருந்த சரஸ்வதியின் தோற்றம் கம்பீரமாகக் காட்சியளித்தது.

பள்ளிகள், கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள் மற்றும் வீடுகளில் அதிகாலையில் சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டன, கோவிலில் பூசாரிகள் மந்திரங்கள் ஓதி வழிபட்டனர். பக்தர்கள் மங்கல கோஷமிட்டு தேவியின் பாதாதி கமலத்தில் வீழ்ந்து வணங்கினர்.

கடவுளின் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற, மாணவர்கள் தங்கள் புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் இசைக்கருவிகள் ஸ்வாமி சிலைக்கு அருகில் ஒரு நாள் முழுவதும் வைத்தனர்.

தேவியை வணங்கி ஆசி பெற ஊர் மக்கள் திரளாகக் கூடி வந்தனர். அதைத் தொடர்ந்து "கிச்சரி" என்று கூறப்படும் அரிசி மற்றும் பயறு கலவையை உள்ளடக்கிய மதிய உணவு, உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் கூட்டு, கத்திரிக்காய் வறுவல், வகைவகையான காய்கறிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கல்வி நிறுவனங்களில் விமரிசையாக விருந்துகள் நடத்தப்பட்டன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "அனைத்து ஆசிரியர்களையும் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்தும்" கொள்கை முடிவை அறிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு சரஸ்வதி பூஜை பரிசாக இது அமைந்தது.

"இந்த முடிவு அவர்கள் தங்கள் சொந்த குடும்பங்களை கவனித்துக் கொள்வதற்கும், முழுமையான மன அமைதியுடனும், முழு கவனத்துடனும் பணியாற்ற உதவும், அதே நேரத்தில் சமூகப் பணிகளுக்கு பங்களிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

சரஸ்வதி பூஜை காரணமாக மாநில அரசு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களாக இருப்பதால், மாநில அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com