குடியுரிமைச் சட்டம் நாட்டை பிளவுபடுத்தும்; அதனை கிழித்தெறியுங்கள்: பாஜக எம்எல்ஏ

நாடு முழுவதும் கடும் போராட்டம் வெடித்த நிலையிலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை என்று மோடி அரசு உறுதியோடு இருக்கும் நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் அந்த சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
குடியுரிமைச் சட்டம் நாட்டை பிளவுபடுத்தும்; அதனை கிழித்தெறியுங்கள்: பாஜக எம்எல்ஏ


போபால்: நாடு முழுவதும் கடும் போராட்டம் வெடித்த நிலையிலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை என்று மோடி அரசு உறுதியோடு இருக்கும் நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் அந்த சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி இது பற்றி கூறுகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாட்டை பிளவுபடுத்தும். இந்த சட்டத்தால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. அதே சமயம், பாஜகவின் வாக்கு வங்கியை அது பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், நாட்டை எப்போதுமே மதத்தின் வழியில் பிரிக்கக் கூடாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிழித்து எறிந்துவிட்டு, அனைத்து மக்களும், சாதி மதங்களைக் கடந்து ஒன்றாக வாழ வகை செய்யும் அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த அரசியல் சாசன அமர்வைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக நான் பாஜகவில் இருந்து விலக உள்ளதாகவோ, காங்கிரஸ் கட்சியில் இணைவேன் என்றோ சொல்லிவிட வேண்டாம். இந்த சட்டத்தால் நாட்டுக்கு எந்த பலனும் கிடைக்காது. இது மக்களின் உணர்வுகளை நேரடியாக பாதிக்கும் செயலாக அமைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com