விசாகப்பட்டினம் ஆந்திரத்தின் நிர்வாகத் தலைநகராவதை யாராலும் தடுக்க முடியாது: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்

விசாகப்பட்டினம் ஆந்திரத்தின் நிர்வாகத் தலைநகராக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் விஜயசாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் ஆந்திரத்தின் நிர்வாகத் தலைநகராவதை யாராலும் தடுக்க முடியாது: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்

விசாகப்பட்டினம் ஆந்திரத்தின் நிர்வாகத் தலைநகராக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் விஜயசாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர அரசின் நிர்வாகப் பணிகளுக்காக விசாகப்பட்டினமும், ஆந்திர சட்டப்பேரவைக்கு அமராவதியும், நீதித் துறைக்கு கர்னூல் மாவட்டம் என மூன்று தலைநகரங்களை உருவாக்க ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு திட்டமிட்டது.

மூன்று தலைநகருக்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்ட மேலவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

இதற்கிடையே  ஆந்திர சட்ட மேலவையை கலைக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களில் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக மூன்று தலைநகரங்கள் குறித்த முடிவை அரசு எடுத்துள்ளது. அதில் பின்வாங்குவதில்லை. விசாகப்பட்டினத்தில் நிர்வாகத் தலைநகர் அமைக்கப்படும். மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் ஆக்குகின்றன. எனினும், இத்திட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது. ஆந்திரத்துக்கு 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா தாமதமாகலாம்; ஆனால், கண்டிப்பாக நிறைவேற்றப்படும்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com