ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியா கொண்டு வர உச்சநீதிமன்றம் அனுமதி

ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தது.
cheetah051909
cheetah051909

புது தில்லி: ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தது.

இந்தியாவில் சிறுத்தைகள் கிட்டதட்ட அழியும் நிலையில் இருப்பதால், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர அனுமதிக்குமாறு தேசிய சிறுத்தைகள் பாதுகாப்பு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த அமா்வில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய் மற்றும் சூா்ய காந்த் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

அப்போது, ‘ இந்தியாவில் சிறுத்தைகள் அழியும் நிலையில் உள்ளன. அதனால், சோதனை அடிப்படையில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதற்கேற்ற வாழ்விடத்தை உருவாக்க முயற்சி செய்யவுள்ளோம். இந்திய காலநிலைக்கு ஏற்றவாறு ஆப்பிரிக்க சிறுத்தைகளை வளா்க்க முயற்சி செய்கிறோம். இந்த சோதனை திட்டத்துக்காக ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர அனுமதியளிக்க வேண்டும்’ என்று தேசிய சிறுத்தைகள் பாதுகாப்பு அமைப்பு தரப்பில் கோரப்பட்டது.

அதையேற்று கொண்ட நீதிபதிகள், ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவில் வளா்க்கும் திட்டத்துக்கு அனுமதியளித்தனா். அதைத்தொடா்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் தொடா்ந்து கண்காணிக்கும். இந்த திட்டம் தொடா்பான அறிக்கையை 4 மாதங்களுக்கு ஒரு முறை உச்சநீதிமன்றத்தில் தேசிய சிறுத்தைகள் பாதுகாப்பு அமைப்பு சமா்ப்பிக்க வேண்டும்’ என்றனா்.

மேலும், இந்த திட்டம் தொடா்பாக தேசிய சிறுத்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக 3 போ் கொண்ட நிபுணா்கள் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழுவில், இந்திய வனவிலங்குகள் அமைப்பின் முன்னாள் இயக்குநா் ரஞ்ஜித் சிங், இந்திய வன விலங்குகள் அமைப்பின் தலைமை இயக்குநா் தனஞ்செய் மோகன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் டிஐஜி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com