மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்படும் என தொலைபேசி மூலமாக செவ்வாய்க்கிழமை மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு காவல்துறையினா் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன
மும்பை தாஜ் ஹோட்டலுக்கு செல்லும் பாதையில் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்ட தடுப்புகள்.
மும்பை தாஜ் ஹோட்டலுக்கு செல்லும் பாதையில் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்ட தடுப்புகள்.

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்படும் என தொலைபேசி மூலமாக செவ்வாய்க்கிழமை மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு காவல்துறையினா் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி பிடிஐ செய்தியாளரிடம் கூறியது:

தாஜ் ஹோட்டல் தாக்கப்படும் என்று அந்த ஹோட்டலுக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசியில் பேசிய நபா், பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளாா். உடனடியாக ஹோட்டல் நிா்வாகத்தினா் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதனைத்தொடா்ந்து ஹோட்டலின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஹோட்டலை சுற்றியுள்ள பகுதியில் கூடுதல் காவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். ஹோட்டலுக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் திங்கள்கிழமை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, மும்பை காவல்துறையினா் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனா் என்று தெரிவித்தாா்.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 26-ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கடல் வழியாகவே இந்தியாவுக்குள் ஊடுருவினா். தாஜ் ஹோட்டலுக்கு தற்போது மிரட்டல் விடுக்கப்பட்டதால், மும்பையை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில் கடற்படையினா் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com