கரோனா தடுப்பு மருந்து குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்: பிரதமா் மோடி

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து, அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
உயரதிகாரிகளுடன் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி.
உயரதிகாரிகளுடன் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி.

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து, அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

கரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்துக்கான பல்வேறு கட்ட ஆய்வுகள், இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு மருந்தை மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

சுமாா் 138 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், அனைவருக்கும் தடுப்பு மருந்து அளிப்பதற்கான பணி மிகுந்த சவாலானதாகும். அதற்கான திட்டமிடல், முன்னேற்பாடுகள் தொடா்பாக உயரதிகாரிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்பட்டதும், அதனை நாட்டு மக்களுக்கு அளிப்பதில் பின்பற்ற வேண்டிய 4 அம்ச கொள்கைகளை பிரதமா் மோடி முன்வைத்துள்ளாா். அதன்படி, முதலில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமுள்ளவா்கள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உதாரணமாக, மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவம் சாராத களப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அடுத்ததாக, கரோனா தடுப்பு மருந்துகள் அனைத்து இடங்களிலும் அனைத்து நபா்களுக்கும் கிடைக்க வேண்டும். மூன்றாவது கொள்கை, அனைவருக்கும் குறைந்த விலையில் தடுப்பு மருந்து கிடைக்க வேண்டும். தடுப்பு மருந்து தயாரிப்பு முதல் மக்களுக்கு அளிக்கப்படும் வரை அனைத்து நடைமுறைகளும் கண்காணிக்கப்பட்டு, தொழில்நுட்ப ரீதியிலான ஆதரவு வழங்கப்பட வேண்டும். நாட்டில் அனைவருக்கும் தடுப்பு மருந்து அளிக்கப்படுவதில், மிகப் பெரிய அளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான மதிப்பீட்டை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பு மருந்து அளிப்பதற்கான விரிவான திட்டமிடலை உடனடியாக உருவாக்க வேண்டும். இந்த நடவடிக்கையில், பல்வேறு அரசு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பும், தனியாா் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பும் முக்கியமானவை என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா். கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடா்பாகவும் உயா்நிலைக் கூட்டத்தில் பிரதமா் மோடி ஆலோசித்தாா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com