எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீா் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, இந்தியத் தரப்பில் இருந்தும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்தும், கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

செவ்வாய்க்கிழமை காலையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தின் குப்வாரா மாவட்டம் நௌகாம் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசியும், சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டும் திடீரென தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, இந்திய ராணுவம் தரப்பிலும் பாகிஸ்தான் எல்லையை நோக்கி பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பு தாக்குதலை நிறுத்தியது. இந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com