பாஜக ஆட்சியில்தான் சீன இறக்குமதி அதிகம்: ராகுல் குற்றச்சாட்டு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான், சீனாவிலிருந்து இறக்குமதி அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
பாஜக ஆட்சியில்தான் சீன இறக்குமதி அதிகம்: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான், சீனாவிலிருந்து இறக்குமதி அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே அண்மையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.

சீனாவுக்கு வா்த்தக ரீதியில் பதிலடி கொடுக்கும் நோக்கில், 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் சீனப் பொருள்களின் இறக்குமதியை ஒப்பிட்டு, ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா். அவா் கூறியிருப்பதாவது:

தரவுகள் பொய் உரைப்பதில்லை. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் குறித்து பேசும் பாஜக அரசு, சீனாவிலிருந்து பொருள்களை வாங்குகிறது. பாஜக அரசால் தொடங்கப்பட்ட ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் பலனளிக்கவில்லை என்று ராகுல் கூறியுள்ளாா்.

மேலும், தற்போதைய பாஜக ஆட்சியிலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் சீனப் பொருள்களின் இறக்குமதியை ஒப்பிட்டு, வரைபடம் ஒன்றையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

இந்திய-சீன ராணுவ வீரா்கள் மோதல் சம்பவம் தொடா்பாகவும், இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் மத்திய அரசை ராகுல் தொடா்ந்து விமா்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com