சிவில் சர்வீஸ் தேர்வர்கள் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள யு.பி.எஸ்.சி அனுமதி

நாடு முழுவதும் பெருகி வரும் கரோனா தொற்றின் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள யு.பி.எஸ்.சி அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் பெருகி வரும் கரோனா தொற்றின் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள யு.பி.எஸ்.சி அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் பெருகி வரும் கரோனா தொற்றின் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள யு.பி.எஸ்.சி அனுமதி அளித்துள்ளது.

புது தில்லி: நாடு முழுவதும் பெருகி வரும் கரோனா தொற்றின் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள யு.பி.எஸ்.சி அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (யு.பி.எஸ்.சி) மாற்றியமைக்கப்பட்ட அட்டவனையின்படி, 2020-ஆம் ஆண்டிற்கான இந்திய சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுகள் மற்றும் இந்திய காட்டிலாகா துறை முதன்மைத் தேர்வுகள் ஆகிய இரண்டையும் வரும் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி நடத்துவதாகத் திட்டமிட்டிருந்தது.

அதேசமயம் நாடு முழுவதும் பெருகி வரும் கரோனா தொற்றின் காரணமாக, பெரும்பாலான தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தை மாற்றிக் கொள்வதற்கு வசதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தனர்.  

இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள யு.பி.எஸ்.சி அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக புதனன்று யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெரும்பாலான தேர்வர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள யு.பி.எஸ்.சி அனுமதி அளிக்கிறது. அதேசமயம் இந்த வசதியானது தேர்வர்களை கையாளுவதற்கான குறிப்பிட்ட மையத்தின் கூடுதல் அல்லது மேம்படுத்தப்பட்ட திறனைப் பொறுத்ததாகும்.

தேர்வு மைய மாற்றக் கோரிக்கைகளை சமர்ப்பிக்க இரண்டு கட்டங்களில் வாய்ப்புகளை யு.பி.எஸ்.சி வழங்குகிறது. ஜூலை 7 முதல் 13-ஆம் தேதி வரை (மாலை ஆறு மணி வரை)  முதல்கட்டமாகவும், ஜூலை 20 முதல் 24-ஆம் தேதி வரை (மாலை ஆறு மணி வரை)  இரண்டாம் கட்டமாகவும் கோரிக்கைகளை https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் வழியாக சமர்பிக்கலாம்.

“முதலில் வருவோருக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையிலேயே மைய ஒதுக்கீடு நடைபெறும். ஒருவேளை குறிப்பிட்ட மையத்தின் கொள்ளளவு பூர்த்தியாகிவிட்டால், தேர்வர்கள் அடுத்த மையத்தைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

அதேசமயம் தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தை இணையதள வழியாக திரும்பப் பெறுவதற்கும், ஆகஸ்ட் மாதம் 1 முதல் 8-ஆம் தேதி வரை யு.பி.எஸ்.சி அவகாசம் வழங்குகிறது. ஒருமுறை திரும்பப் பெற்றுவிட்டால் பின்னால் எந்த காரணத்திற்காகவும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்’பட மாட்டாது.  

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com