கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்தைத் தொடங்கியது மாருதி சுசூகி

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி கார்களை வாடிக்கையாளர்களுக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது.
கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்தைத் தொடங்கியது மாருதி சுசூகி
கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்தைத் தொடங்கியது மாருதி சுசூகி


புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி கார்களை வாடிக்கையாளர்களுக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த ஓஆர்ஐஎக்ஸ் ஆட்டோ இன்ஃப்ராஸ்டிரக்சர் சர்வீஸ் லிமிடடுடன் இணைந்து, இந்தியாவில் கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்தை மாருதி தொடங்கியுள்ளது.

சோதனை முயற்சியாக, இந்த திட்டம் நாட்டின் குருகிராம் மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஸ்விஃப்ட், டிசைர் உள்ளிட்ட பல முன்னணி கார்களை வாடிக்கையாளர்கள் குத்தகைக்குப் பெற முடியும்.

கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்துக்குப் போட்டியாக, மாருதி சுசூகியும் களத்தில் இறங்கியுள்ளது. 

கரோனா காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தால் கார் விற்பனையை அதிகரிக்க பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களும் எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால், கார்களை சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடும் திட்டத்தை கையில் எடுத்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com